30. திருமூல நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 30
இறைவன்: மாசிலாமணீஸ்வரர்
இறைவி : ஒப்பிலாமுலையம்மை
தலமரம் : படர் அரசு
தீர்த்தம் : கோமுக்தி
குலம் : ?
அவதாரத் தலம் : திருவாவடுதுறை
முக்தி தலம் : திருவாவடுதுறை
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி - அஸ்வினி
வரலாறு : கயிலையில் வாழ்ந்த ஒரு சித்தர். திருவாவடுதுறையில் மூலன் என்ற இடையன் இறந்து கிடக்க அதனைக் கண்ட பசுக்களின் துயரினைத் துடைக்கும் பொருட்டு அம்மூலனின் உடலில் தம் உயிரினைச் செலுத்திக்கொண்டு பசுக்களைச் சிலகாலம் மேய்த்து வந்தார். பின்பு அங்கு அமர்ந்து மூவாயிரம் பாடல்கள் ஆண்டுக்கு ஒன்று வீதம் பாடினார். அவை திருமந்திரம் எனப்பட்டு பத்தாம் திருமுறையின்கண் வைக்கப்பட்டன.
முகவரி : அருள்மிகு. கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை – 609803 நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04364-232055, அலைபேசி : 9443900408

இருப்பிட வரைபடம்


ஊனுடம்பில் பிறவிவிடம் தீர்ந்துலகத் தோருய்ய
ஞானமுதல் நான்குமலர் நல்திருமந் திரமாலை 
பான்மைமுறை ஓராண்டுக் கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனஎயி றணிந்தாரை ஒன்றவன்தா னெனஎடுத்து.

- பெ.பு. 3594
பாடல் கேளுங்கள்
 ஊனுடம்பில்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க